சந்தம் சிந்தும் கவிதை

பணி”—எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பில்
வதந்திங்கு இணையும் உறவோரே
உந்தும் உணர்வில் கவியாக்கி
எந்தன் ரசனைக்கு உரித்தாக்கி…

வாரம் தோறும் வருவோரும் வந்திடை இடையே இணைவோரும்
நூரா ஆர்வத் தோடு வரும்
நுங்கள் பணியை மதிக்கின்றேன்

வாரம் தோறும் வருமாறு
வருத்தி கேளேன் பலநூறு
சோலி சொந்த பணி உண்டு-உம்
சுமையை உணரும் தெளிவுண்டு

ஆக்கும் கவிதை திறனாய்வால்
அடையும் தகுதி எனும் உங்கள்
நோக்குக் அமைய என் பணியை
நோகாமல் நீர் ஆய்ந்துரைப்பேன்

பாவை அண்ணா எனும் உங்கள்
பாசம் சுரக்கும் பதிவுகளால்
நேயத்தோடு என் நெஞ்சினிலே
நித்தம் வாழ்வீர் சோதரரே.

பாவை புனையும் பணியோடு
பற்பல குடும்ப பணியோடு
ஆவல் மேவ இணையும் நும்
அன்புக்கு நன்றி தொடரவோமே..