வியாழன் கவிதை

பசுமை போற்றுவோம். -கெங்கா ஸ்ரான்லி

பசுமை போற்றுவோம்.
-கெங்கா ஸ்ரான்லி
———-
எங்கெங்கு பார்த்தாலும்
இயற்கையின் அழகு
எழில் மிகு தோற்றத்தில்
எண்ணற்ற பசுமைகள்
ஒரு லட்சம் மரம்நட்டு
காட்டை வளமாக்கினாள் ஒரு பெண்
ஒருமரம் நட்டு நீரூற்றி
ஒவ்வொருவரும் வளர்த்தால்
உலகமே ஏற்றமிகு பசுமையில் செழிக்கும்
இப்போ பார்க்குமிடமெல்லாம் பச்சயம்
பச்சை பசேல் என வயல்கள்
மக்களின் மனதில் களிப்பு
மரங்களில் இலைகள் துளிர்ப்பு
பூக்கும் பருவம் தளிர்த்து
குளிரினால் சில மரம் பூக்கவில்லை
இயற்கையை பாதுகாக்க வேண்டும்
இயற்கையை அழித்தால் என்ன நடக்கும
மழை இல்லாமல் வரண்ட. நிலமாகும்
இயற்கையை பாதுகாத்து நடந்து
பசுமையை வளர்ப்போம்
பசுமையை போற்றுவோம்
நாமும் பசுமையாக வாழ்வோம்..

நன்றியுடன்
-கெங்கா ஸ்ரான்லி