வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

.வியாழன் கவி இல(89) 09/02/23
தேடலின் தரிசனம்.

நமக்குள்ளே நம்மை நாம் தேடுவோம்
நம்மைச் சுற்றிப் பின்னப் பட்ட
முள் வேலியை அகற்றி
உள்மனத் தேடலில் குறை நிறை அறிந்து
நம்மை நாம் ஏற்று
முழுமையாய் அன்பு கொண்டால்
நாமும் வாழ்ந்து சமுகத்தையும் வாழ வைக்க
நம்மால் முடியும்

முழு மனித வளர்ச்சியே
முதல் தேவை என்பதை அறிவோம்
முழுமையைப் பெற்றிட
உரிய பக்குவமுணர்ந்து
திருந்தியே வாழ்ந்திடுவோம்

நல்மனம் கொண்டோரய்
நம்பிக்கையின் ஒளிர்கீற்றை
நம்மை நாடி வருவோருடன்
நயமுடனே பகிர்ந்தளித்து

அன்புடனும் பண்புடனும்
அக்கறையாய் செவி மடுத்து
அமைதியை அவர் காண
உறவுப் பாலம் அமைத்து
உடன் பயணம், செய்திடுவோம்.

தேடலின் தரிசனத்தால்
பெற்ற புது வாழ்வுதனை்
பெருமையோடு பகிர்ந்து நாமும்
புனர் வாழ்வு அளித்திடுவோம்”
நிறைவாக வாழ்ந்திடுவோம்?
நன்றி வணக்கம்