வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

02/02/23/ வியாழன் கவி இல (88)
சுதந்திரமாமே…????

யாருக்கு எங்கிருந்து எப்போ???
நெஞ்சிலே முள்ளாய் குத்தி
ஆறாத ரணமாய்இருக்கும்
வினாவிற்கு விடை எங்கே?

உரிமைகள் பறிக்கப் பட்டு
வாழ்க்கையின் விளிம்பிற்குத் தள்ளப் பட்டு
நடைப் பிணமாய் வாழும் மனிதர்கள்
அடிமைத் தளையில் கட்டுண்டு கிடக்க

ஒத்த உணர்வுடைய சக மனிதரிடை
மொழி என்ற ஒன்றால் வேறுபட்டு
அடக்கு முறை அடிமைத் தனம் வேரூன்ற
குற்ற உணர்வேதுமின்றி

நாட்டில் கொண்டாட்டமாம்
75 வது ஆண்டு சுதந்திர தினமாம்
கோடிக் கணக்கில் பணம் விரயமாக
பற்றாக் குறையால் வாடுது மக்கள் சமுகம்

எது சுதந்திரம்?
பிறர்உரிமையில் தலையிடாது
தனதுரிமையை விட்டுக் கொடாது
இயல்பாய் வாழ்வதன்றோ
தனிமனித சுதந்திரம்
நன்றி வணக்கம்.