வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

கவி இல (121) 08/02:24
சுதந்திர தாகம்

செந்தமிழில் தேசிய கீதம்
இசைத்து இன்பமாய் வாழ்ந்திருந்தோம்
இதம்தந்த வாழ்வை
இனி நாம் என்று
காண்போமோ

நால்வகை மதமும்
ஒன்றாய் இணைந்து
ஒருவனே தேவன் என
புனிதம் போற்றி
மனிதம் போற்றி வாழ்வோமோ

இதம்தரும் வாழ்வில்
மகிழ்ச்சி ஓங்கி
இமை என நம்மைக் காத்து
மனம் நிதம் மகிழ
சுதந்திரமாய் வாழ்ந்தோம்
சுற்றுலாவில் மகிழ்ந்தோம்

நல்லிணக்க ஆட்சியிலே
நாடே செழிக்க
ஒருவர்க்கொருவர்
பகிர்ந்து வாழ
அறத்திறன்வளர்த்து
அடிமைத் தளையறுக்க
சுதந்திரம் வருமா?