கவி இல(115) 11/01/24
தை மாதம் தரை இறங்க,,,,,,,
தைப் பாவாய் வாராய்
தரணி செழிக்க வா வா
உலகின் நலன்களை
கண்கள் காண
வந்திடுவாய் தை மகளே
வானம் பொழிய
வெள்ளம் பெருக
வறுமை நிறைய
வாடிடுவோர் நிலை பார்
ஓலைக் குடிலினிலே
வேலை தொழிலுமில்லை
வாடிடும் வறியோர்பார்
வயிறு குளிர பாலை வார்
சுய நலம் கொண்டோர் மாள
அன்பு வழி அறம்சுரக்க
தன்னலம் அறுத்து
சம உடமை இன்பம் தர
மாநிலம் மகிழ வேண்டும்
மனுக்கள் மனம் குளிர வேண்டும்
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்ற பெரும் நம்பிக்கையில்
வாடிடும் பேதையர்க்கு
வரம் தாராய் அன்புருவே!!!!!
நன்றி வணக்கம்……..