வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

கவி இல (111) 24/08/23
என்று தீரும்

நாட்கள் மாதங்களாய் தொடர
மாதங்கள் வருடங்களாய் விரிய
தொலைத்திட்ட உறவுகளை
தேடுகின்ற படலம்
இன்னும்தான் தொடர்கிறதே

வந்திடுவார் அமைதி
தந்திடுவாரென
ஏங்கிய விழிகள் தன்னில்
தேங்கிய கண்ணீர்வழிய

போராட்டப் போர்வையோடு
தெருவோரம் நலிந்து நின்று
கொட்டும் மழையினிலும்
கொடூர வெயிலினிலும்
தவமாய் தவமிருந்தும்
தீரவில்லை ஏக்கங்கள்

கோரிக்கைகள் மனுக்களென
பல்நூறு பத்திரங்கள்
பத்திரமாய் திரும்பிடுவார்
என்ற சிறு நம்பிக்கையில்

காத்திருந்து காத்திருந்து
கண்களும்தான்பூத்திருக்க
நலிந்து மெலிந்த உடலோடு
என்றுதான் தீருமோ
இந்த தேடல் தாகம்
நன்றி வணக்கம்