வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

கவி இல(85). 01/12/22

உயிர் நேயம்

எவ்வுயிரும் தன்னுயிராய் எண்ணி
உயிர் நேயம் காக்கும் மனித நேயம்
துன்புறும் வேளையிலே
துணைக் கரம் நீட்டி வரும்

அன்பினை அள்ளித் தரும்
அன்புடன் அரவணைக்கும்
அன்பாய் அணைத்துக் காக்கும்
அதுவே நல் மனித நேயம்.

உயிர்கட்கு ஊறு நேரின்
உள்ளம் கசிந்துருகி
சாதிமத பேதமின்றி
மானிட தர்மம் காக்கும்

இன்றோ துடிக்கும் உயிர் காக்க
துணைக் கரம் ஏதுமில்லை
எரியும் நெருப்பணைக்க
அன்புக்கரம் தானுமில்லை

உயிர் நேயம் காக்கும்
மனித நேயமெங்கே
மனிதன் இருக்கிறான்
மரத்துப் போன இதயத்தோடு்
நன்றி வணக்கம்்்