வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

கவி இல (108)06/07/23
வரப்புயர!!!!!!

கரையில்லா குளமும்
அணையில்லா ஆறும்
பெருக்கெடுக்கும் வெள்ளத்திலே
கரை புரண்டோடுதல் போல

நன்நெறி ஒழுக்கம்
பேணாதோர்க்கும்
சொல் புத்தி கேட்டு
நடக்காதோரக்கும்

புகட்டுகின்ற அறிவுரைகள்
புறக்குடத்தில்வார்த்த
நீர்போல பாழாய்த்தான்
போகுமன்றோ

வரப்புயர நீருயர்நது
நெல்கதிர்கள் செழித்துயர்ந்து
குவிந்து வரும் நெல்மணிகள்
வாழ்வை வளப்படுத்த
வீடும் நாடும் நலம் பெறும்
மனிதமும் லளரந்துதுயரும்

நன்றி வணக்கம்