வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

கவி இல (75) 29/09/22
பாகம் +பிரி+வினை
யார் பிரிப்பது எதை ஏன் பிரிப்பர்?
வேதனைகள் சோதனைகள் பிரித்திடுமோ
வியாகுலமோ வியாதிகளோ
கடன் தொல்லைகள் பிரித்திடுமோ

கஷ்டங்கள் நஷ்டங்கள்
பழிச்சொல்கள் கவலைகளும்
உணர்வுகளும் பொறாமைகளும்

பகைமைகளும் எதிர்ப்புகளும்
உறவுகளைப் பிரித்திட
பந்தங்களும் பாசங்களும் அறுந்து போக
பாசத்து உறவுகளின் பரிதாபக் காட்சி

அசையும் சொத்து அசையா சொத்தென
எலும்புக்கு அடிபடும் நாய்கள் போல
ஏட்டிக்கு போட்டி கேட்படி

தனியாய் நின்ற அபலைத் தாய் கேட்டாள்
நான் யாருக்கென
எனக்கு எனக்கு என
விரிந்த வாய்கள்
உனக்கு உனக்குக்கு என குவிந்தன.