வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

கவிதை இல(53) 27/03/22
தலைப்பு
உறவு
———
உறவுக்கு உயிருண்டு
உயிரைக் கொடுக்கும் பற்றுண்டு
உறவுக்கு சிறகுண்டு தூரப் பறந்து
துணையாகும் மனமுண்டு

அன்னையாய் தந்தையாய் பிள்ளையாய்
நெருக்கமாய் வளருமுறவு வாழ்வினுக்காய்
சோதரனாய் சோதரியாய் கூடி யங்கே
அரவணைப்பில் ஏங்குவதும் பாசத்திற்காய்

உள்ளங்களை இணைக்குது உறவுப் பாலமாய்
பல பல விதமாய் உருவாகுது உறவு எம்மிலே
பண்பாடு தவறாத வாழ்க்கை முறை
என்றென்றும் சிறப்புண்டு உறவுக்கு

உறவுக்கும் பிரிவுண்டு
உயிர் நீங்கினும் மதிப்புண்டு
உறவுக்கு நிகர் உறவே
உரிமையும் கடமையும் அதுவே

உறவின்றி உயிரில்லை உலகினிலே
குறைகள் யாவும் மறையும் தூய அன்பினிலே
மறைகள் கூறும் உரைகளன்பு வளர்வதற்காய்
நிறைவுண்டு இறையன்பில் நித்தியமாய்.