கவி( இல 51 )
மாற்றத்தின் திறவுகோல். 06/01/21
மாறிவரும் உலகினிலே மாற்றமில்லா மனிதனின்
மூடிக் கிடக்கும் மனக் கதவை
முழுமையாய் முற்றுமாய் வசப்படுத்தும்
அற்புத் திறவுகோல் அதுவே மாற்றத்தின் திறவுகோல்.
மாறுபட்ட எண்ணம் முரண்பட்ட வாழ்வு
நோயுற்று வாழ்கின்றான் ஒருவன்
காதல் பரவசத்தில் மூழ்கித் திளைக்கின்றான்
தோழமையின் கதவடைத்மு உறவின்றித் தவிக்கின்றான்
பதவி புகழ் அதிஸ்டமென உச்சத்தில் ஏறுகின்றான
பாதிப்புத் தோல்வி ஏமாற்றம் தாளாமல்
புலம்பி அழும் மனிதன் மாற்றத்தின் திறவுகோலை
ஏனோமறந்து விட்டான்
காலச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்றி
சம தர்ம வாழ்வை ஏறெடுத்து
உணர்வு சிந்தனை சக்தியெல்லாம்
சமுதாய முற்போக்கின் மேன்மைக்காய்
மாற்றத்தின் திறவு கோலால்
உன்மனக் கதவைத் திறதிறந்து விடு
பரவசமூட்டும் வெகுமதிகள்
உனக்காக் கொட்டிக் கிடக்குது அங்கே பார்…..