வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

கவி இல(107) 29/06/23
வாழ்ந்த கால நினைவுகள்
************************

நேற்று என்றதும் நெஞ்சம் நிறையுது
பவித்திர வாழ்வு திவ்விய தேட்டம்
பவ்வியமாய் காத்து
பக்குவமாய் வாழ்ந்தோம்

அளவில்லா உறவுகள்
ஆயிரம் கனவுகள்
கற்றிடும் இடமெல்லாம்
கண்ணியம் கண்டோம்

இன்ப துன்பத்தில்
அன்பாய் அணைத்து
கூடி ஓடி குறைகள் களைந்து
ஆடிப் பாடி ஒன்றிணைந்திருந்தோம்

நேற்றைய நினைவின் பூரிப்பில்
புது யுகம் புதுமைக்கு சாமரம் வீசுது
விஞ்ஞானம் ஓங்கி மெய்ஞானம் அருகிட
இளமை எழுந்திட பழமை தளருது

திட்டமிடா வாழ்வில்
நட்டம் வந்து நயமிழந்து
நானிலம் நலியுது
நாட்களும் நகருது ……

நன்றி வணக்கம்.