வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

கவி இல (98) 13/04/23
சித்திரை வந்தாலே

சித்திரை வந்தாலே கோடையும்
கூட வர ,வசந்த கால கீதங்களும்
வண்ண வண்ண கோலங்களும்
இத்தரையில் நிறைந்து பொலியுது

புத்தாண்டு பூத்து வர
புத்துணர்ச்சி பொங்கிவரும்
புதுப் புதுச் சிந்தனைகள்
பூப் பூவாய் மலர்ந்திடுமே

சித்திரையால் வையகத்தில்
நல்லாட்சி அமைந்திடணும்
நலம் தரும் சிந்தனையால்
நல்லாட்சி மலர்ந்திடணும்

நிறைந்த நெஞ்சினிலே
நித்தமும் நிம்மதி
முத்தான முன்னேற்றம்
முத்திரையாய் பதித்திடுமே

சிங்காரச் சித்திரையே
மக்கள் மனம் மகிழ
விழித்திடு உன் விழித்திரையை
இன்னருளை வழங்கிடு பூவுலகில்

நன்றி வணக்கம்.