வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

கவி இல(96) 30/03/23
கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்….

இதமான தென்றல் காற்று
மரங்களின் அசைவாடலில்
தூய்மை குன்றா நன்நீர்
தெளிவான நீர் நிலைகள்
இயற்கையோடியைந்து
ஆனந்தமாய் வாழ்ந்தான் மனிதன்

நாகரீகத்தின் உச்சம் தொட
தொழில் வளர்ச்சிப் புரட்சியிலே
காடுகள் வீடுகளாக சுற்றுப்புறம்
காற்றில்லா வனங்களாக
வெப்பத்தின் அகோரம்

வானம் பொய்த்தது
நீர்நிலைகள் வற்றியது
வற்றிய குளம் குட்டை
குப்பைமேடாகியது

கழிவுகளும் நெகிழிகளும்
ஆற்றோடு வழிந்தோடி நஞ்சாய்
கடல்நீரில் கலந்திடவே
கடல் வளமும் குன்றலாச்சு
உயிரினங்கள் மடியலாச்ச

நீரின்றி உலகு அமையாது என்பர்
மனித வாழ்வின் முக்கிய அங்கம்
சுற்றுச் சூழலுக்குப் பங்கமேற்படாது
பாதுகாப்பது நம் கடனாமே
நன்றி வணக்கம்