வியாழன் கவிதை

நேவிஸ்பிலிப்

(02/03/23)கவி இல(92)
நிமிர்ந்த சுவடுகள்

எம் மனப் பதிவேட்டில்
நிமிர்ந்த சுவடுகளாய்
மாண்பு மங்கா ஒளியோடு
நிலைத்து வாழும் முன்னோர்கள்

தேடற்கரிய செல்வமாய்
காக்க வேண்டிய பொக்கிசமாய்
உடம்பால் அழிந்தாலும்
எம்மில் உயிர்ப்பாய் வாழ்பவர்கள்

உலக வாழ்வினிலே உழன்று
பல அனுபவம் பெற்றவர்கள்
பண்பாடு கற்றுத் தந்து
நன்நெறியில் வளர்ந்தவர்கள்

அரை வயிறுணவுண்டு
அளவாய் நீர் அருந்தி
பாங்காய் பணி புரிந்து
வாய்விட்டுச் சிரித்த படி

தோல்வியில் துவளாது
வெற்றியில் ஆணவம் கொள்ளாது
அன்பமைதி பொறுமை காத்து
வாழ்ந்தால் முன்னேற்றம் உண்டென்று

வாழ்க்கைப் பாடம் சொன்ன மேதாவிகள்
காலத்தால் அழியாத கல்வெட்டுக்கள்
நிமிர்வின் சுவடுகள்
இவரகள் எம் சந்ததிக்கும் வழி காட்டிகள்
வாழ்த்திப் போற்றுவோம் எம் சந்ததியை வாழ்விப்போம்
நாம் எம் சந்ததியை வாழ வைப்போம்.
நன்றி வணக்கம்