வியாழன் கவிதை

நாளை என்ன நடக்கும்

கெங்கா ஸ்ரான்லி

மண்ணிலே பிறந்தவர்கள்
விண்ணுக்கு கடைசியில் செல்வர்
பிறக்கும்போதே படைத்தவன்
இறப்பும் எப்போது எனெழுதி வைப்பான்
இடையில் நாம் என்ன செய்கின்றோம்
இதையாரவது நினைப்பார்களா
வாழ்வியலை வளமாக்க
மட்டுமே சிந்திப்பர்
வாழ்வு முடிந்தால்
என்ன நடக்கும் எதுவுமே நடக்காது
இருக்கும் போது நாலுபேருக்கு
நல்லது செய்ய வேண்டும்
நன்மை செய்யாவிட்டாலும்
தீமையாவது செய்யாமல் விடவேண்டும்
அடுத்தவர் பற்றி கண்டனம்
அடுத்தவர் குடும்பத்திற்குள் தலையீடு
ஆக்கபூர்வ மற்ற செயல்
அங்கிங்கென அலைபாயும் மனம்
இவை தவிர்த்து நாளை என்ன
நடக்கும் என சிந்தித்தால்
நானிலத்தில் நல்லதே. நடக்கும்
நல்ல மனிதராக எல்லோரும்
இருப்பார்கள்
இது இயற்கை நியதியா