சந்தம் சிந்தும் கவிதை

-நாதன் கந்தையா-

= விடியல் =

பேய் கொள்ளும்
பிணியொடொரு பிரிவும் சேரும்.
பித்தொடு பிடாரிகளும்
துணையாயாவர்.
தாயில்லை சேயில்லை
இல்லுமில்லை.
தரித்திரமே உருத்திரமாய்
கொள்வார் காண.
வேர்மூலம் விடையில்லா
வினைகள் ஓங்கும்.
வேடன் கை வலையாக
சதிகள் சூழும்.
கானகத்தில் வாழ்வதுபோல்
கனவும் தோன்றும்.
காற்றிடையே தூசியென
வாழ்வும் ஆகும்.
பாழாகி போவாய் நீ
என்பாள் தாரம்.
பக்கதில் கொள்ளாமல்
சுற்றம் மேவும்.
நேராக இடிவந்து தலையில் வீழும்.

நிறைவாக அஃதே னென்று
கேட்டால் நீயும்.

மானுடத்தின் விடியலை யார்
தடுத்தார் என்றால்
மாற்றமில்லை அத்தனையும்
நடந்தே தீரும்.

அறிவு நிறை ஓர்ப்புடனே
கடைப்பிடித்து.
கண்ணியமாய் பெண்ணியத்தின்
விடியல்மீது
களங்கமது புழங்க எவர்
முயன்றால் மேலே
கண்டதெல்லாம் தொடரும்
உன் வாழ்வில் லென்பேன்.

– நாதன் கந்தையா-