வியாழன் கவிதை

நன்றும் தீதும்

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி :
“நன்றும் தீதும் ”

சிந்தனை தெளிவின் பாதையிலே
சிறப்புறு நலங்கள்
நாம் பெறவே
நன்றே செயல்கள்
நாம் செய்வோம்
கலப்பிலா அறுவடை
நாம் பெறுவோம்

நானிலம் செழிக்கும்
வான் பொலிவு
நன்றே அமைந்த
வான் வெளியை
மாசுகள் கொண்ட காற்றாக்கி
நாமே நன்றும் தீதும்
எழுதுகிறோம்

வரவும் செலவும் பார்க்கும் நாம்
வாழ்க்கையில் விதைத்தவை எதுவென்று சீர் படும்
சிந்தையை நாம் கொண்டால் தீயவை அணுகா பாதையிலே
நன்மைகள் கோடி
நாம் பெறுவோம்
நன்றென வாழ்வினை
நாம் சமைப்போம்!!!
நன்றி