வாழும் காதல்
வாழும் காதல் வையமதில்
வானம் அளவு வளரட்டும்
சூழும் தொல்லை அகன்றிடவே
சுடராய் காதல் மிளிரட்டும்
ஆளும் அரங்கு அவனியிலே
அரும்பும் காதல் மலரட்டும்
நாளும் மலரும் நல்லன்பு
நலமே வாழ்வில் ஓங்கட்டும்
காதல் என்றும் பொழியட்டும்
கனிவு என்றும் மலரட்டும்
மோதல் இல்லா மோகனங்கள்
மோதி அன்பு பெருகட்டும்
நாதம் தருமே இன்பவாழ்வு
நன்றாய் ஓங்கி வளரட்டும்
வேதம் சொல்லும் காதலின்று
வேண்டும் வாழ்வின் சொருக்கமாக!
நகுலா சிவநாதன் 1748