வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

கைக்குள் கையாய் கைத்தொலைபேசி

கைக்குள் கையால் கைத்தொலைபேசி
கண்ணைக் கவரும் வனப்பைப் பார்
பைக்குள் இருந்து பாடாய்ப் படுத்தும்
பண்பு நிலையைப்பாரீரோ!

வையம் தன்னில் வரவும் செலவும்
வருடம் முழுதும் போகுது பார்
கையும் மீறி கதைத்த காசே
கரையுது எங்கள் வரவுகளில்

அடக்கமாகும் தொலைபேசி அமுதமாகப்
பேசிடலாம்
முடக்கமாக நாமிராமல் முயலும் விடயம் ஆற்றிடலாம்
தடங்கலாகும் பாதைதனிலே தனித்து
இதுவும் உதவிடுமே!
மனங்கள் மகிழப் பேசலாம்
மனதோடு ஒட்ட காட்சிகள் காணலாம்

ஊடகப்பரப்பாய் கைக்குள் ஒளிருது
உடனுக்குடன் சேதியைச் சொல்லுது
வாடகை கட்டி எடுக்கலாம்
வந்தணைத்து எம்மைச் செல்லலாம்
நாளிகை காணும் நன்மைக்கே
நன்றாய் பயனும் ஆக்கிடலாம்
அளவாய் நீயும் பாவிப்பாய்
அமுதாய் என்றும் பேசிடலாம்

நகுலா சிவநாதன்1747