வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

பொங்கும் உளமே
தங்கும் தையே!!

பொங்கும் உளமே
தங்கும் தையே!!
எங்கும் எழிலாய்
பூக்கும் மனமே!!

மங்கா வரமே
மானிட உரமே
மழையாய் வருவாய்
மண்ணை நிறைப்பாய்

பையவருவாய் பலனைத் தருவாய்
வையம் செழிக்க
வருவாய் தையே!!

கரும்பு செழிக்க
கதிரவன் ஒளிர
ஆவினம் பெருக
ஆனந்தம் பொங்க
கொண்டாடுவோம்
நற்பொங்கல்

உளமே பொங்க
வளமே பெருக
களமே கதிராய்
காணும் தையே!!

நகுலா சிவநாதன்1745