வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

மனிதத்தின் நேயமே!

மனிதத்தின் நேயமே மானிடப் பண்பே
புனிதம் பேணும் புத்துயிர் வாசமே
உயிர்களின் காப்பரணே!உன்னதத் தியாகமே
உலகில் இன்று குறையாது வேண்டுமே!

ஐநாவும் மார்கழி 10 ஐ மனிதநேய நாளாக்கியதே
மானிட வாழ்விலே வேண்டியது அன்பே
கருணை இரக்கம் உதவும் உள்ளம்
கடவுள்போல் வேண்டும் அனைவருக்கும்
வாழ்வோரை உயர்த்தி வைப்போம்.
வானமளவு உதவிடுவோம்

தனித்த வாழ்வு கூட்டு ஆகட்டும்
வாழும்வரை உதவிடுவோம்
உயிருள்ளவரை உயிர்களைக் காப்போம்.
மனிதநேயமே மக்கள் வாழ்வாகட்டும்
புனிதம் பேணி உயிர் காப்போம்.

நகுலா சிவநாதன் 1742