வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

சுதந்திரமாமே

சுதந்திர உள்ளம் சுடர்விடும் வெள்ளம்
விதந்தெமை அணுக விடியல் தோன்றும்
தாயக சுதந்திரம் வந்தெழில் கூட்ட
நன்றென நாமும் வென்றென எழுவோம்

இன்றளவும் எமக்கு இல்லை சுதந்திரம்
நின்றுமே போராட கிடைக்கா வரமே
75 ஆண்டுகள் எண்கள் கூடியது மட்டும்
எழிலாய் தமிழன் வாழ முடியவில்லை
பொழிலாய் ஆட்சி மாறி மாறி நிலைக்குது நாட்டில்

விடுதலை தீயும் வேட்கை தணியவில்லை
விண்ணை எட்டும் உரிமையும் இல்லை
பேச்சு மட்டும் மூச்சாய் முளைக்கும்
பேரம் பேச யாரும் இல்லை

Feb 4 சுதந்திரமே! பெருமை இல்லை தமிழர்க்கு
ஒற்றுமை ஒன்றே உறுதியாக்கும்
ஓங்கி தமிழர் உயர்ந்து நின்றால்
வேற்றுமை களைந்து ஒற்றுமைத் தமிழோடு
ஒன்றாய் வாழ வென்றே எடுப்போம்
ஒற்றுமைச் சுதந்திரம்

நகுலா சிவநாதன்