வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

பள்ளிக்காலம்

இனிக்கும் பருவம் இதயத்தில் அது
இன்பம் தந்த இளமைப் பருவம்
துன்பம் அகன்று துயரம் மறந்து
அன்பே துளிர்க்கும் அருமைப் பருவம்

பள்ளிக்காலம் துள்ளி நினைவுகள்
தூரச் சென்றிடும் மகிழ்வான காலம்
வெள்ளியலையாய் வெண்சிட்டுக்களாய்
அள்ளி அணைத்து மகிழ்ந்த பருவம்
அகன்றே விட்டதே! எமைவிட்டு
நினைத்தாலே இனிக்கும் பருவம்
நிம்மதி தந்த வசந்தகாலம்

நகுலா சிவநாதன் 1736