வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

தியாகமே தீர்ப்பானதா?

நல்லோரின் வீதியிலே உண்ணாநோன்பு
நாம் பார்த்து நெகிழ்ந்த கணம்
பல்லோர்கள் பார்த்திருக்க பன்னிருநாள்
பார்த்தீபன் பட்டினியியின் சாவிலே!
அல்லல்கள் ஆயிரம் அனுபவித்து ஆகுதியானான்
அல்லும் பகலும் துடித்தான் வேதனையில்!

ஐந்தம்ச கோரிக்கை முன்வைத்த திலீபனும்
அன்னைமண் விடுதலைக்காய்
ஆகுதியாக்கினான் தன்னுயிரை
ஒருசொட்டு நீர்கூட அருந்தாத திலீபன்
உண்ணா நோன்பை உறுதியாக்கினான்
தியாகத்தின் தீர்ப்பு தீபத்தின் ஒளியிலா?
தீந்தமிழ் மக்கள் வடித்தனர் கண்ணீர்
இரக்கமில்லா அரக்கர்கள் இழக்கவைத்த
தியாகமே! தீர்ப்பானதே!

நகுலா சிவநாதன் 1732