வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

பெருகிடும் வலிமை பெற்றுயர தடையேது

அருகிடும் வாழ்விலே அறிவினை ஆதாரமாக்கி
பெருகிடும் வலிமையை பெருக்குதல் நலமே!
உருகிடும் வாழ்விலும் உணர்வின் உந்தலை
உலகாளும் திறனாக வளர்ப்பதில் பேரின்பம்
கருகிடும் பயிரும் கணப்பொழுது வாழ
கசிந்து பாயும் நீரும் தேவையன்றோ!
பருகிடு;ம் நீரால் பயனது உண்டு
பற்றோடு வாழ்வில் வலிமை பேரின்பம்!

பெருகிடும் வலிமையே பேருதவி செய்திடும்
பெயரினை அதுவே பறைசாத்திடும்
அருகிடும் செயலும் அணுவது ஆனாலும்
ஆற்றலை வளர்ப்பது அனுதினம் வேண்டுமன்றோ!
பெருகிடும் வலிமையைப் பெற்றே கொள்
பெருகியே நிற்கும் தடையதை உடை!
விடையது கிடைக்கும்

நகுலா சிவநாதன்1705