பிரிவு துயர்
கவிதையில் முழக்கமிடும் பெண்ணிவள்
கனவாய் கருத்துகள் மொழியும்
புதுமையிலும் சொற்கள் நிழலாடும்
பூட்டிய பெ ண்களின் சீர்மைபேசும்
வதுவையாய் வண்ணத் தமிழ் நேசிப்பு
வாஞ்சையாய் கவிகளின் கோர்ப்பு
பதுமையாய் மறைந்த சோதரி கோசல்யா
பாரில் நினைக்கும் தருணமிது
தமிழின் பழமைச் சொற்கள் பலதும்
அணியும் இவள் கவிகள்
தினமும் பெண்ணியம் திகட்டா பேசும்
வனப்பும் வாழ்வும் முடங்கினாலும்
மனமும் நேசிப்பும் கவிதைக் கனலில்
மண்ணில் மடிந்தாலும் எண்ணத்தில்
நிழலாடும் இவள் கோசல்யா சகோதரி
நினைவில் என்றும் நீங்காநிழலாய்
நகுலா சிவநாதன்