வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

மீளெழும்காலம்

கறைபடிந்த போரின் தாக்கம்
கலகங்களையும் ஏக்கங்களையும்
காவியே வடுக்களாய்த் தந்தது
செய்வறியாது திகைத்து
எழுந்த கணங்கள்
சேதிகள் பலவற்றை
கேள்விகளாக்கின!

இன்னமும் அகதியாய்
இருட்டறைகளுக்குள்
மீளெழும் காலம் எப்போ?
ஏதிலிகளாய் நாடு நாடாய்
அலைவின் தொடர்கதையே!

மீளெழும்காலம் எப்போ?
மிகுதி காலம் வாழ்வா? சாவா?
ஏக்கப் பெருமூச்சு தாக்கமாய்!

மீண்டும் ஒரு அகதி வாழ்வு வேண்டாம்
தீண்டும் எண்ணங்களுடன்
திசை தெரியா வழிகளுக்குள்
திக்குமுக்காடும் வாழ்வு
இனியும் வேண்டாம்!!

நகுலா சிவநாதன்1676