பாமுகம்
காட்சி ஊடக பரப்பாய்
கனிவாய் உயர்ந்த பாமுகம்
நாற்புறம் விரிவை நம்தமிழ் காட்டும்
போற்றிடும் புகழ்மாலை
ஏற்றியே போற்றுவோம்
அடுத்த தலைமுறை அன்னைத்தமிழை
அகிலம் எங்கும் எடுத்துச் செல்ல
எடுத்த நுட்பம் எல்லை பரவியது
எழில் கொண்ட வளர்ச்சி ஏற்றம் கண்டது
25 வருட இமாலய சாதனை
இணைந்திட்ட உறவுகள்
சிறுவர் முதல் பெரியோராய்
படைப்புடன் மிளிர்ந்த பாமுகம்
தாய்த்தமிழை தங்கு தடையின்றி
எங்கும் பரப்பும் எழில்மயம்
என்றென்றும் தொடர வாழ்த்துகிறோம்
நகுலா சிவநாதன்