வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

படிக்கும் கல்வி

படிக்கின்ற கல்வியினால் பயனும் உணடு
பார்ப்போர்கள் கண்களிலே விருந்தும் உண்டு
துடிப்புடனே சிந்திக்கும் சிறுவர்; உண்டு
துடுக்காக பேச்சதனை உரைப்பதும் முண்டு
வடிக்கின்ற கவிதையிலே வாசம் முண்டு
வண்ணத்தமிழ் தொடுப்பிலே அழகு முண்டு
குடிக்கின்ற நீரிலே மாசும் முண்டு
குதூகல வாழ்விலும் நேர்மை யுண்டு

எடுக்கின்ற உணவிலே சத்தும் முண்டு
ஏற்றமது பெற்றிடவே உயர்வுமுண்டு
தடுக்கின்ற வேலையிலே தடைக ளுண்டு
தரணியிலே வென்றுவாழ உயர்வு முண்டு
நடுகின்ற நாற்றிலே திறமை யுண்டு
நல்லவர்கள் வாழ்விலே ஒழுக்க முண்டு
கொடுக்கின்ற கரங்களிலே வரமும் முண்டு
கோடிநன்மை தேடிவர இடமும் முண்டு

நகுலா சிவநாதன்1703