வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

ஏற்றும் தீபங்கள்

ஏற்றும் தீபம் ஒளிர்க!
எங்கும் அமைதி பெருகட்டும்
போற்றும் கடவுள் அருள்க!
பொய்மை என்றும் மறையட்டும்
நாற்றும் ஓங்கி வளர்க
நன்மை பெருகிச் செழிக்கட்டும்
காற்றும் அசைந்து வீச
கன்னித் தமிழும் ஓங்கட்டும்

கதிரும் முற்றி நிறைக்க
கனிவும் பெருகி மிளிரட்டும்
புதிரும் ஓங்கி வளர
புதுமை நிறைந்து மலரட்டும்
பதியும் மகிழ்ந்து பொலிய
பாதை எங்கும் ஒளிரட்டும்
வதியும் தேசம் வளமாய்
வாழ்வு என்றும் சிறக்கட்டும்

தீபம் ஏற்றி வணங்கி
தீமை அழித்து உயரட்டும்
தாபம் நீங்கி தணிய
தடைகள் ஓடி மறையட்டும்
துாபம் போட்டு நாமும்
துாய வழியில் பயணிப்போம்
கோபம் தவிர்த்து புவியில்
கோடி வாழ்வு வாழ்ந்திடுவோம்

நகுலா சிவநாதன்1661