துளி நீர்
கருமேகம் கனிந்து வார்க்கும்
களமேடும் குளிர்ந்து செழிக்கும்
துளி நீரும் சுமந்து வரும்
துணையாகும் வாழ்வின் வளம்
துளிர்க்கும் நீரும் பயிரை வளர்க்கும்
துாய்மை இளநீரும் தாகம் தணிக்கும்
தளிர்க்கும் மரமும் தண்மை அளிக்கும்
களிக்கும் காலமும் கனிவின் இனிமையே!
தாகத்தின் துளிநீரே! தர்மத்தின் வார்ப்பே
பாகமாய் உடலின் உயிர்வாழ பயனாவாய்
நாதமாய் கடல் சுமந்து வந்தாலும்
நன்மை வாழ்வின் நல்வரம் நீயே!
துளிநீரை வீணாக்காதே! என்றும்
துணையாக கொண்டு வாழ்க!
நகுலா சிவநாதன்1660