சந்தம் சிந்தும் கவிதை

நகுலா சிவநாதன்

பணி

பணிவு என்னும் பெருமை
அணியாய் அகத்துள் வந்தால்
கனிவு கொண்ட மனமும்
காலம் எல்லாம் பெருமையே!

துணிவை வளர்த்துக் கொண்டாலும்
பணிவாய் செய்யும் கடமை
பலனைத் தந்து உயர்த்துமே உலகில்
நனியாய் நற்செயல் நாளும் கூடிடுமே!

மேன்மை பணியே மேதினியில் வரம்
துாய்மை உடைத்து துலங்கல் நன்றே
வாய்மை வரமாய் வந்தனை செய்வாய்
நேர்மை காட்டி நெறிதனை வளர்ப்பாய்

நகுலா சிவநாதன்