மூப்பு
காலம் செல்ல வருமே!
காற்றாய் உடலும் ஆடிடுமே!
கோலம் யாவும் மாற்றம்
கோடி அழகும் கொட்டிவிடும்
பாலம் போடும் வாழ்வு
பாதை அமைத்தும் நில்லாதது
ஞாலம் வருடும் மூப்பு
நாணி நிற்கும் ஆயுள்காப்பு
முதுமை வந்து மோதும்
முனைப்பும் ஓங்கித் தடுமாறும்
வதுவை வயதும் செல்லும்
வாழ்வில் பிடிப்பும் குறைந்திடுமே
பொதுமை பொறுமை பிறக்கும்
போட்டி இன்றி வாழ்ந்திடுக
எதையும் எண்ணி வாழா
இரக்கம் கொண்ட வாழ்வுமிங்கு!
வயதில் ஆண்டு கூடும்
வண்ணம் குறைந்து செல்லும்
பயத்தில் மனமும் ஆட்டம்
பண்பாய் வாழ உறுதிகொள்ளும்
நயத்தில் இசைவு குறையும்
நிலத்தில் வாழ்ந்தால் திருப்தியாகும்
இயக்கம் சற்று தளர
இனிமை இன்றி வாட்டமாகும்
நகுலா சிவநாதன்1657