சந்தம் சிந்தும் கவிதை

நகுலா சிவநாதன்

சந்தம் சிந்து கவி

முடியும்

முடியும் எண்ணம் உன்னுள்
முளைக்க வேண்டும் விதையாக!
விடியும் பொழுது வானம்
விரட்டும் இருளைத் தானாக!
வடியும் தண்ணீர் வளத்தை
வழங்கச் செல்லும் நிலமீது!
படியும் சிந்தை தானே
படைக்கும் வாழ்வை உரமாக!

அண்டப் புகழைப் பெற்றே
ஆளும் உற்ற உயர்திறனே!
உண்ட உணவு செரிக்கும்
உழைப்பால் என்றே உயர்ந்திடுக!
கண்டம் விரியும் கடலே
காக்கும் அரணாம் உணர்ந்திடுக
தொண்டு செய்யும் மதியே
தொடர்ந்தே ஓங்கும் புவிமேலே!

பொழியும் மழையே நிறைக!
பொழிலே அழகாய்ப் பூத்திடுக!
கழியும் காலம் களிப்பாய்க்
கவரும் வண்ணப் பேராற்றல்
அழியும் தீமை அகன்றே!
அணைக்கும் உள்ளம் ஆறுதலாய்!
சுழிபோல் துன்பம் சூழ்ந்தாலும்
சுகமாய் வாழத் தலைப்படுவோம்!

நகுலா சிவநாதன்