வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

உன்னதமே உன்னதமாய்

விடியலின் உன்னதத் தேவதையே
விண்ணுலகு போற்றும் காரிகையே
மண்ணுலகு மதிக்கும் மாமணியே
மாட்சியின் பெருமை நீயன்றோ!

உன்னதமே உன்னதமாய் உலகில்
உணர்வின் விழிகள் கண்டோம்
உறுதியின் பெட்டகம் நீயன்றோ!
உரமாய் வாழ்வதும் இல்லறப் பெருமையன்றோ!

தாயாகப் போற்றிட தரமானாய்
சேயாக செந்தமிழ் பாவையானாய்
வல்லமையே வாழ்வாகக் கொண்டு
வளமிகு உன்னதம் படைத்திடு பெண்ணே!

தடைகள் தாண்டி புறப்படு நீயும்
தரணியில் புதுயுகம் படைத்திட புறப்படு
கணணி தொழில்நுட்பம் கற்று நீயும்
கற்கண்டாய் வாழ்வை அமைத்திடு பெண்ணே!

நகுலா சிவநாதன்1656