சந்தம் சிந்தும் கவிதை

நகுலா சிவநாதன்

சிவனருள்

சிந்தை குளிரச் சிவனை வணக்கி
முந்தை வினைகளை அகற்றி வாழ்வோம்
எந்தை ஈசன் அருளும் வரமும்
ஏற்றம் தருமே எந்நாளும்

அகந்தை அழிந்த அரியநாள்
அன்பு ஜோதியே தோன்றியநாள்
நேர்மை உண்மை காட்டிய இராத்திரி
நெருங்குமே ஈசன் அருளும் சிவராத்திரி

சிவசிவ சொல்லி சிந்தனை செய்யின்
உளமது நிறைக்கும் உணர்வது பூரிக்கும்
அகமதில் அருளும் அனுதினம் வேண்ட
சுகமது கிடைக்கும் சுடரது ஒளிரும்

நகுலா சிவநாதன்