சந்தம் சிந்தும் கவிதை

நகுலா சிவநாதன்

சாந்தி
பக்தியின் பரவசம் பாரிலே
சித்தி பெற்றிட சிறப்புடன் பாடி
முத்தியின் முழுமதி சாந்தியாய்
முழு உலகும் அமைதி ஓங்கட்டும்

சாந்தி சமாதானம் காட்டிடும் மனது
ஓங்கி உயர்ந்திடும் மனிதநேய வரம்
தாங்கும் தடைகள் ஏந்தி வாழ்ந்தாலும்
அமைதியின் பிறப்பே அழியாத வரம்

நகுலா சிவநாதன்