உருமாறும் புதிய கோலங்கள்
மாறும் கோலம் யாவும்
மனதுள் இனிமை பூக்கும்
வாழும் காலம் என்றும்
வளத்தை அகத்துள் விதைக்கும்
கோலம் காணும் அழகு
கோடி மின்னல் காட்டும்
ஞாலம் இயற்கை விரிக்கும்
நாளும் நன்மை பிறக்கும்
உருமாறும் இலையும்
உளமார இரும்பாகும்
கூட்டுப் புழுவும் உருமாறும்
கூட இறகும் புதுப்பிறப்பாகும்
மாற்றம் காணுது உலகு
மனதுள் புதுமை வசந்தமாகும்
தடுப்பு தடையை உடைக்கும்
தளிர் நடையும் உலகை உருவாக்கும்
நகுலா சிவநாதன்1650