வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

மூங்கில்

புல்லின் இனமே மூங்கில்
புனிதம் ஆன நல்மரமே
வில்லாய் வளைத்தால் வளையும்
விரும்பி ஊத இசையாகும்
புல்லாங் குழலாய் நீயும்
புரிந்து பிறக்கும் நல்லோசை

நாற்பது அடியே வளர்வாய்
நான்கு திசையும் மிளிர்வாயே
ஊற்றாய் நீரை உறிஞ்சி
உணவாய்க் கமிழும் உலகினிலே
நாற்றாய் வளரும் திறனால்
நன்கு விளையும் விண்ணுயர!

பண்டா உண்ணும் உணவாய்
பரிந்து நிற்பாய் மண்ணின்மேல்
கண்டால் அழகுப் பச்சை
களிப்பாய் நிலைப்பாய் மிகுகாலம்
உண்டால் மருந்தாய் நிற்பாய்
உலகின் உயரம் நீயன்றோ!
தண்டால் அரும்பும் ஓசை
தளிர்த்துத் துளிர்க்கும் மரமேநீ!

நகுலா சிவநாதன்