வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

பூக்கட்டும் புன்னகை

புன்னகை பூக்கட்டும்
புதுயுகம் பெருகட்டும்
மென்னகை வார்ப்புகள்
மேதினியில் தழுவட்டும்
உள்ளமும் மகிழட்டும்
உணர்வுகள் எழட்டும்
மெல்லமாய் வாழ்விலும்
மேன்மைகள் தழுவட்டும்

அமைதியே பெருகும்
சாந்தமும் உருவாகும்
உடலின் கனதி குறையும்
கவலைகள் மறைந்தோடும்
நினைவலைகள் மெல்லப் பூக்கும்
நித்திய கடமைகள் உரமாய் எழும்

புன்னகைக்க மறந்த காலம்
ஆயுளைக் குறைக்கும்
ஆரோக்கியத்தை மறுக்கும்
சோர்வை உருவாக்கும்
சோதனைகளை கூட்டும்

புன்னகையோ!!!

இன்பத்தைக் கூட்டும்
இயக்கத்தை அதிகரிக்கும்
துன்பம் மெல்ல விலகும்
துணிவு படர்ந்து பிரகாசிக்கும்

பூக்கட்டும் புன்னகை
புரிந்திடட்டும் மனசுமே

நகுலா சிவநாதன்1649