வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

தடைகளை எதிர்த்து முன்னேறு

தடைகள் எதிர்த்து முயன்றே!
தகுதியை வளர்த்துக் கொண்டிடுக!
படைகள் போலத் தடையும்
பலமாய் வந்து மோதினாலும்
நடையாய் வரும் நம்பிக்கை
நாளை பெருகும் தடையுடைத்து
குடைபோல் விரியும் குணமே
குலமாய் விளங்கும் நல்லறிவாய்

அல்லும் பகலும் உழைத்தே
அனைத்தும் ஆக்கு அறுவடையாய்
சொல்லும் செயலும் துணிவாய்த்
தொடரும் பயத்தைக் களைந்திடுக!
கல்லும் சொல்லும் கவிபோல்
கன்னித் தமிழும் மின்னிடுமே!
வெல்லும் இந்த உலகில்
வேராய் அறுப்பாய் தடைதனையே!

வார்க்கும் முகிலும் மழையாய்
வாடும் பயிர்க்கு நன்நீரே!
பார்க்கும் காட்சி படமாய்
பாலம் போடும் நுண்மாட்சி
ஏருடன் உழவன் பாடும்
ஏற்றமே காணும் நன்மாட்சி
பாருடன் படுமே முயற்சி
பாதையை அமைக்க துணிந்திடுநீ

நகுலா சிவநாதன் 1648