வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

பொங்கும் புதுமை பொழிக!

எங்கும் தமிழே மணக்க
எழிலாய் வருக தைமகளே!
பொங்கும் எண்ணம் பூரிக்க
பொழிவாய் புலர்வாய் புத்தாண்டே!

மங்கா சிந்தை மனத்திலே
மாட்சிமை தரவே வந்திடு!
தங்கும் செல்வம் நிலைக்க
தடைகள் உடைத்து வந்துவிடு!

உழவன் வாழ வழிவிடு
உழைப்போர் சிறக்க அருளிடு!
வறுமை ஒழிக்க வாழ்வு கொடு
வளங்கள் பெருக்க நலங்கள் கொடு!

திறமை வளர முயற்சி கொடு
தீமை அழிய நற்பலம் கொடு
கதிரவன் ஒளிர கடமைகள் பெருக
காரிருள் அகல ஊரது சிறக்க
பொங்கலோ பொங்கல்
பொங்குக! உலகமெங்கும்!

நகுலா சிவநாதன்
1645