சந்தம் சிந்தும் கவிதை

நகுலா சிவநாதன்

பூக்கள் பூக்கட்டும்

பூக்கட்டும் புதுநாற்று
புனிதங்கள் நிறையட்டும்
காக்கட்டும் மனிதநேயம்
கன்னித்தமிழ் ஓங்கட்டும்

பாமுகப்பூக்கள் மலரட்டும்
பைந்தமிழ் எண்ணம் ஒளிரட்டும்
நான்முகப்பரப்பு விரியட்டும்
நன்மைகள் தழைத்தோங்கட்டும்

வான்சுடர் வண்ணம் மிளிரட்டும்
வையகம் எங்கும் வியாபிக்கட்டும்
தேன் சுவை தமிழும் ஒளிரட்டும்
தேசத்தின் பரப்பிலே நூலும் மின்னட்டும்

நகுலா சிவநாதன்