வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

மாற்றத்தின் திறவுகோல்

மாற்றம் என்ற திறப்பு
திறக்கும்வரை
பூட்டாகத் இருக்கும்
திறக்கும் திருப்பம் உனதானால்
திடமாய் மனதும் உறுதியாகும்

மாறாத தன்மை மாற்றத்திற்குண்டு
ஆறாத ரணங்கள் ஆட்சியிலுண்டு
காணாத பொழுதுகள் காட்சியுமில்லை
கண்ட பொழுதிலும் சாட்சிகள் இல்லை

மாற்றத்தின் திறவுகோல் மாறிடாது
மனமாற்றமே திறன்மாற்றம்
எழுந்திட்ட புத்தாண்டு எடுத்திட்ட தீர்மானம்
மாற்றத்தின் மணிமகுடம் போற்றட்டும் புகழாக!

நகுலா சிவநாதன் 1643