வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

வளர்ந்த குழந்தைகள் தாமே

வளர்ந்த குழந்தைகள் அவர்கள்
வாடா மலர்கள் போன்றோர்
சிந்தை சிறப்பாய் வளர்ந்தாலும்
சீரிய எண்ணம் மிகுந்தவர்கள்

வீரியமாய் விளங்கும் குழந்தைகளாய்
நேரிய பார்வையும் நெடிய வனப்பும்
கூரிய எண்ணம் குவித்து நிற்பவர்கள்
வளர்ந்த குழந்தைகள் தாமே!

வண்ணத்துப் பூச்சிகளாய் வளர்ந்து நின்றாலும்
குழந்தையுள்ளம் குதூகலித்து நிற்கும்
பிறப்பின் பெருமை சிறப்பின் துலங்கலாய்
புலத்தில் உதித்தாலும் புகழாய் மிளிரட்டும்

நகுலா சிவநாதன் 1719