வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

ஆகா வியப்பின் விழிம்பில்……

குடும்பத்தின் குத்துவிளக்காய் இருப்பவரே!
கூடி உறவுகளை இணைத்தே இன்பம் காண்பவர்
அன்பும் பண்பும் அகத்தில் ஒளிர்பவர்
ஆறாத காயங்களை ஆற்றும் வல்லவர்

புகுந்த வீட்டு உறவாக இருந்தாலும்
புன்னகை சிந்தாது கண்ணியமாய்
காலத்தை நகர்த்தும் பெண்ணிவர்
அஞ்சா நெஞ்சமும் அமைதியின் வடிவமும்
அளவாகப் பேசும் நற்பண்பும் நிறைந்தவர்

ஆலயத்தொண்டும் ஆன்மீகக் கருத்தும்
ஆனந்தம் பொங்க ஆற்றுபவர்
ஒற்றுமை உணர்வாலே உறவுகளை
பற்றோடு அணைக்கும் பாவையிவர்

ஆற்றல் கண்டு வியந்த நாட்கள் பல
ஊற்றாக உறவாடும் பாசத்தின் பந்தமிவர்
விருந்தோம்பலில் விடிவெள்ளி நட்சத்திரம்
அரும்பும் ஆசைகளை அளவோடு தீர்ப்பவர்

அன்ரி என்றால் அமுதூட்டும் இன்பம்
அவருடைய சுறுசுறுப்பும் தன்னம்பிக்கை
வியப்பின் விழிம்பில் இட்டுச் செல்லும்
வாழும் காலம் வானமளவு எல்லை
நாளும் உயர்ந்து வாழ
வாழ்த்துகிறேன் அன்ரி லக்சுமி

நகுலா சிவநாதன்1713