வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

பெண்மை எனும் மென்மை

அன்பை விதைக்கும் ஆணிவேரே
அகிலம் காக்கும் பெண்ணினமே
உன்னை வருத்தி உயிர்கொடுக்கும்
உத்தம இனம் பெண்ணினமே
அன்னை என்ற ஆளுமைக்குள்
அத்தனையும் அடங்கும் உத்தமிகளே
தொன்மைத் தமிழால் வாழ்த்துகிறேன்
தொண்டு செய்யும் மங்கையர!

ஆற்றல் கொண்டே எழுபவளே
ஆலம் விழுதாய் இணைப்பவளே!
ஊற்றாய் வளர்க்கும் உன்திறமை
உணர்வாய்; மகவை உயரவைக்கும்
காற்றில் சுழலும் பம்பரமாய்
காலை மாலை கடமையாற்ற
போற்றும் உநதன்; நற்செயல்கள்
பொழுதாய் நிறைக்கும் இல்லத்திலே

மென்மை என்ற பெண்மைக்குள்
மேனி புதைக்கும் பெண்டீரே
துன்பம் என்ற சகதிக்குள்
துணிந்தும் விழாமல் எழுந்திடுக
இன்பம் என்னும் புன்னகையால்
இடர்கள் களைந்து மிளிர்ந்துநின்று
அன்பு கொண்டு அணைத்திடுவீர்
அகிலம் நிறைக்க உலகாள்வீர்

நகுலா சிவநாதன்1712