சந்தம் சிந்தும் கவிதை

நகுலா சிவநாதன்

நாதம்

நாதமான இசையைக் கேட்க
நாளும் மனது இனிமையே
ஓதும் வேதம் நாதமாக
ஓசை யங்கு மிளிருதே
நாதமான இசையினையே
நாதன் ஈசன் விரும்புவான்
சூது வாது அற்று நீயும்
சுடராய் பாடும் பாடல்
நாதமாக இசைக்குதே
நல்ல கீதம் பொழியுதே

தென்றலாக இசையுமே
தேனாய்க்காதில் ஒலிக்குதே
மன்றம் அதிரும் இன்னிசை
மனதை தூய்மை ஆக்குதே

நகுலா சிவநாதன்